இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Sep 25, 2024 02:37 AM GMT

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

தாம் ஆதரிக்கின்ற கட்சி தோல்வியடையும் என்ற கூற்றை விமர்சித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today Sri Lanka

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்

ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்

வவுனியாவில் 14 வயது மாணவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய பயிலுனர் ஆசிரியை கைது

வவுனியாவில் 14 வயது மாணவனை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய பயிலுனர் ஆசிரியை கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW