இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 23, 2024 03:19 AM GMT
Rukshy

Rukshy

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று

ஏனைய இடங்களில் சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.