மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம்

Sri Lanka Weather
By Mayuri Aug 21, 2024 02:34 AM GMT

இலங்கையின் தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடைக்கிடையே மழை

அத்துடன், வடமேல் மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் | Weather Alert In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW