நீர்க் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நீர்க் கட்டணங்களும் குறைக்கப்படும் எனவும், நீர்க்கட்டண குறைப்புத் தொகை குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற 'நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை' ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலாபமீட்டும் நீர் வழங்கல் சபை
நீர் வழங்கல் சபை, இதற்கு முன்னர் மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது சபை, 6.2 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |