நாட்டில் குடிநீர் போத்தல்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

Sri Lanka Sri Lankan Peoples Water
By Fathima Dec 02, 2025 05:16 AM GMT
Fathima

Fathima

வெற்று பிளாஸ்டிக் போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் குடிநீர் போத்தல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தட்டுப்பாடு 

வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டியிருக்கும் எனவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் குடிநீர் போத்தல்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! | Water Bottle Shortage

சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக நாட்டில் குடிநீர் போத்தல்களை நிரப்பும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

வெற்று போத்தல்களை களஞ்சியப்படுத்துவதற்கு அதிக இடவசதி தேவைப்படுவதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான போத்தல்கள் மட்டுமே கையிருப்பில் வைக்கப்படுகின்றன.

சிறப்பு முறைகள் 

இலங்கையில் மல்வான,பியகம, யக்கல மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.

இவை மீண்டும் இயக்கப்படும் வரை, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினால் சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் குடிநீர் போத்தல்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! | Water Bottle Shortage

மேலும், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட எப்போதும் நீர் பாட்டில் விநியோகம் பெறும் நிறுவனங்களுக்கு கூட இப்போதெல்லாம் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை வழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், சில மீட்பு மையங்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் போத்தல்கள் கிடைக்கின்றன என்றும், அணுகல் கடினமான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்ய சிறப்பு முறைகள் தேவைப்படுகின்றன என்றும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.