நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி
Water Board
Water
By Mayuri
நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு இணங்க நீர்க் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டணம் குறைக்கப்படும் விதம்
வீட்டுப் பாவனைக்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாகவும், அரசாங்க மருத்துவமனைகளுக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தினாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றுக்கான கட்டணம் 6.3 வீதத்தினாலும் குறைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பொதுவாக நீர்க்கட்டணம் 5.9 வீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் எப்பொழுது நீர்க் கட்டணங்கள் குறைக்கப்படும் என்பது குறித்த அதிகாரபூர்வ திகதி விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |