இலவச இணைய கொடுப்பனவு விளம்பரங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இலவசமாக இணைய கொடுப்பனவு வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து தொலைபேசி நிறுவனங்களினாலும் இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக விளம்பரம் செய்யப்படுகின்றது.
சமூக ஊடகக் கணக்கு விபரங்கள்
இவ்வாறான விளம்பரங்களின் இணைப்புகளை அழுத்துவதன் ஊடக சமூக ஊடகக் கணக்கு விபரங்கள் அல்லது அலைபேசி விபரங்களை மூன்றாம் தரப்பிற்கு கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலவச இணைய கொடுப்பனவு வழங்குவதாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மெசென்ஜர் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தகவல்களில் உண்மையில்லை என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |