பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Money
By Fathima Dec 13, 2025 07:39 AM GMT
Fathima

Fathima

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படும் அபாயம் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning About Counterfeit Currency Notes Sri Lanka

பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகத்திற்கிடமான நாணயத்தாள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.