கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha Education
By Chandramathi Mar 29, 2024 12:22 AM GMT

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அணையாடை

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Voucher For School Girls 

இதன்படி சுகாதார அணையாடைகளுக்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.

மேலும் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''என கூறியுள்ளார்.