வாக்குகளுக்காக நடத்தப்படும் நாடகங்கள்: பகிரங்கப்படுத்தும் வியாழேந்திரன்
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுகொள்ள வேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்களின் போது சொல்லப்படும் பொய்களை தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (05.08.2024) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பொய்யிலே பிறந்து பொய்யிலே குடும்பம் நடாத்தும் சாணக்கியன் உண்மையினை அறிந்து பேசவேண்டும்.
தமிழரசு கட்சி
அவர், கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக பல தேர்தல்களை எதிர்கொண்ட போதிலும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில், தமிழரசுக்கட்சிக்குள் புகுந்து வெற்றி பெற்ற பின்னர் ஏனையவர்களை தூற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்” என சாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |