விராட் கோலி-ஷாருக்கான் நடனம்!சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

Virat Kohli Indian Cricket Team
By Chandramathi Apr 07, 2023 05:57 PM GMT
Chandramathi

Chandramathi

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர், ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா அணி வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.  

இந்தக் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.     

விராட் கோலி-ஷாருக்கான் நடனம்!சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி | Virat Kohli Shah Rukh Khan Dance Video

விராட் கோலி-ஷாருக்கான் நடனம்

இதேவேளை பெங்களூர் அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோலியையும் ஷாருக்கான் சந்தித்து அவருடன் நடனமாடி மகிழ்ந்ததுடன் அவரது கையிலும் முத்தமிட்டுள்ளார்.

மேலும் இந்தப் போட்டியை நடிகர் ஷாருக்கான்,அவரது மகள் மற்றும் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று இரசித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்