கொத்மலை அணையுடனான வீதி தொடர்பில் வெளியான தகவல்
கொத்மலை அணைக்கு மேலே உள்ள வீதியில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அத்தியட்சகர் ஜெனரல் எச்.எம்.ஜே. ஹேரத் தெரிவித்தார்.
தடைவிதிக்கப்பட்டுள்ள வாகனங்கள்
இந்தப் பகுதியில் வீதிகள் உடைந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதி மீளமைப்பு பணிகள் முடிவுற்று அடுத்த வாரத்திற்குள் வீதிகள் திறக்கப்பட்டால் மீண்டும் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்படும்.

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
கொத்மலை அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் முழுமையாக நிராகரித்தார்.
சேதம் மற்றும் ஆபத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்காலத்தில் நீரை வெளியேற்றுவதற்கு முன்பு பொதுமக்களுக்குத் அறியப்படுத்தும் முறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.