வாகன விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்: வெளியாகியுள்ள தகவல்
தற்போதைய பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக வாகன இறக்குமதி தொடர்பான வரி முறைகளை அரசாங்கம் மாற்ற வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி திருத்தம் சந்தையில் வாகனங்களின் விலையில் சில தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தற்போது மூன்றாம் தரப்பு கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விளைவாக, அரசாங்கத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வாகன இறக்குமதி வரி அமைப்பு
மூன்றாம் தரப்பு கடன் கடிதங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் அடிப்படையிலும், சுங்கச்சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கான வழக்குகளில் எட்டப்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் வாகன இறக்குமதி வரி அமைப்பு மாறும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.