வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல்

Ranjith Siyambalapitiya Electric Vehicle vehicle imports sri lanka
By Mayuri Jul 18, 2024 10:44 AM GMT

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல் | Vehicle Import In Sri Lanka

வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்த ஆயத்தத்திற்கு தயாராக உள்ளோம்.

இது தொடர்பான குழுவின் அறிக்கை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW