வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள நம்பிக்கை
நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்று இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வான இறக்குமதி
“நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட வரிசையில் பொதுப் போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள், பிற போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் மாற்றுகள், பின்னர் சாதாரண வாகனங்கள், பின்னர் சொகுசு வாகனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படும் என்று அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம்.
எனவே, இந்தக் குழு ஜூலை மாதம் 4ம் திகதி கூடி, ஒரு மாதத்திற்குள், அதாவது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள், தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நம்புகிறோம். ஆகவே இந்த நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கலாம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |