ஹபரணை பகுதியில் வாகன விபத்து!
Sri Lanka Police Investigation
Accident
By Fathima
ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை - பொலன்னறுவை வீதியில் ஈரிகெஓய பகுதியில், மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பாதசாரி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.