நாட்டில் சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
Vegetables Price
Vegetable Price Today
By Fathima
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கரட் ரூ.700 முதல் ரூ.1,000 வரை விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மரக்கறி விலைகள்
பீன்ஸ், லீக்ஸ் போன்ற காய்கறிகளும் 500 முதல் 800 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சுமார் 30 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூசணிக்காய், 100 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக காய்கறி பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தமையே விலை உயர்வுக்கு காரணம் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.