அதிபர் சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை அதிபர் சேவையில் தற்போது பல வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க அடுத்த 2 வாரங்களுக்குள் புதிய ஆட்சேர்ப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்கள்
நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள வெற்றிடங்கள் மற்றும் ஓய்வூதிய தரவுகளின்படி, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி அதிபர் சேவையில் உள்ள மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 3,151 என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அதிபர் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் முறையான பதவி உயர்வு முறையின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சேவை ஆணையகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.