இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ஆதரவு

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka United States of America
By Fathima Apr 15, 2023 10:40 PM GMT
Fathima

Fathima

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவிச் செயலாளர் ரமின் டோலூயி ஆகியோர் வோஷிங்டனில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒப்பிடக்கூடிய நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து அவர்கள் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.