ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு

United National Party Ranil Wickremesinghe
By Mayuri Aug 25, 2024 04:58 AM GMT
Mayuri

Mayuri

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாடு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டிற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு | United National Party Special Conference

நிறைவேற்றப்படவுள்ள முன்மொழிவுகள்

இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரேரணைகள் தொடர்பான பல முன்மொழிவுகளும் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW