ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானியாவில் இருந்து வரும் செய்தி: சுமந்திரன் சொல்வது உண்மையா!

Tamils M A Sumanthiran United Kingdom
By Laksi Aug 08, 2025 03:18 PM GMT
Laksi

Laksi

அண்மையில் சுமந்திரன் ஜெனிவா தொடர்பில் பிரித்தானியா எதையோ ஒன்றை செய்யப்போவதாக தன்னிடம் அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஒரு செய்தியை பிரித்தானியா சொல்லியிருப்பதாக சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டு அது பத்திரிகை தலைப்புகளாக மாறியிருந்தது.

அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆதரவு நிலைப்பாட்டை பிரித்தானியா எடுத்திருப்பதான அந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் தற்போது பல கேள்விகள் எழுகின்றன.

பிரித்தானியாவின் இந்த நகர்வு பற்றி சுமந்திரன் மட்டுமே பேசுகிறார் , அது உண்மையானால் ஏன் அது வெளிப்படுத்தவில்லை, பிரித்தானிய அரசு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாயே திறக்காத நிலையில் இதுவும் ஒரு சதி நடவடிக்கைதானா,  குடும்ப பயணம் மேற்கொண்ட சுமந்திரன் எந்த அடிப்படையில் இந்த விடயங்களை பேச முடியும், இப்படியான பல கேள்விகளுக்கும் மக்களுக்கோ ஊடகங்களுக்கோ கட்சி உறுப்பினர்களுக்கோ தெளிவுப்படுத்தப்படாத இந்த விடயத்தை ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...