சவூதி அரேபியாவில் அனைத்து வகை விசா வைத்திருப்போருக்கும் உம்ரா அனுமதி
சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் அனைத்து வகையான விசாக்களையும் வைத்திருப்பவர்கள், உம்ரா கடமைகளை நிறைவேற்றலாம் என்று, அந்த நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கான அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"சவூதி விஷன் 2030"இன் நோக்கங்களை ஆதரிக்கும் வகையில், உம்ரா கடமைகளை நிறைவேற்றுபவர்களுக்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், ஹஜ் மற்றும் உம்ரா அமைப்பிற்குள் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்ரா கடமை
இந்த விசாக்களில் தனிப்பட்ட மற்றும் குடும்ப வருகை விசாக்கள், மின்னணு சுற்றுலா விசாக்கள், போக்குவரத்து விசாக்கள், பணி விசாக்கள் மற்றும் ஏனைய அனைத்து வகையான விசாக்களும் அடங்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் தங்கள் கடமைகளை எளிதாகவும் அமைதியாகவும் நிறைவேற்றுவதற்கு உதவுவதில் சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்றும் அந்த நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |