மக்கா சென்ற இரு இலங்கையர்கள் மரணம்

Saudi Arabia Death World
By Fathima Jul 05, 2023 01:59 PM GMT

மக்காவிற்கு புனித யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.