மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இருவர் உயிர் மாய்ப்பு
மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவரும் சிறுமி ஒருத்தியும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (09.07.2024) மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கெங்கநாதன் ரதன் மற்றும் 16 வயதுடைய புண்ணியமூர்த்தி பேஜினி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களினால் அடையாளம்
குறித்த இருவரும் திக்கோடை தும்பாலை 4ஆம் வட்டார வீதியில் உள்ள வேம்பு மரத்தில் தூங்கிய நிலையில் பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக குறித்த இருவரும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் என்ற ரீதியில் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |