சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Jan 03, 2025 06:52 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (2) சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க கோரிய ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு

சட்டநடவடிக்கை

கைதான 27 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கருவாட்டுக்கல், உடங்கா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two People Were Arrested In Sammanthurai

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து 4200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆறு பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery