தொடரும் சீரற்ற காலநிலை! முல்லைத்தீவின் தற்போதைய நிலவரம்

Jaffna Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fisherman
By Rakshana MA Nov 27, 2024 10:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள கடல் அதிக கொந்தளிப்பு நிலமையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம்

மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம்

கடும் கொந்தளிப்பு

கிழக்கில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது.

தொடரும் சீரற்ற காலநிலை! முல்லைத்தீவின் தற்போதைய நிலவரம் | Turbulent Sea In Mullaitivu

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு கடல்கள் என்றுமில்லாதவாறு கடும் சீற்றத்துடன் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்களை தொழிலுக்கு செல்லாது பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஒலுவில் பாலம் உடைந்ததில் அக்கறைப்பற்று - கல்முனை போக்குவரத்து பாதிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கான அறிவுறுத்தல்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கான அறிவுறுத்தல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW