பாணின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Economy of Sri Lanka
By Madheeha_Naz Sep 25, 2023 05:20 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

பாணின் விலையை குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விலை குறைப்பு

“450 கிராம் பாணின் விலையை விரைவில் 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்த்துள்ளோம்.

பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாணின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Try To Reduce The Cost Of The Bread

இந்த வகையில் பாண் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் வரிகள் குறைக்கப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் எடுக்குமானால் 450 கிராம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.