அமெரிக்காவில் இலட்சக்கணக்கான விசாக்கள் ரத்து! டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை
அந்த அறிக்கையில், ''8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
விசாக்கள் ரத்து
விசாக்களுடன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள், நாட்டில் தங்கியிருக்கும் போது, தேவையான அனைத்து சட்டரீதியான விடயங்களுக்கும் உட்பட்டே நடந்துகொள்ள வேண்டும்.

ட்ரம்பின் நிர்வாகம் இதனை கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் குறிப்பிடும்படியாக மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.