திரிபோஷா நிறுவனம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் வசம் : முன்னெடுக்கப்படும் திட்டம்
இலங்கையிலுள்ள மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திரிபோஷ நிறுவனத்தை புத்தாக்கம் செய்து அபிவிருத்தி செய்து அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தலைமையில் குறித்த நிறுவனம் நேற்று(04) நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கலந்துரையாடல்
மேலும், திரிபோஷாவின் உற்பத்தி திறனை அதிகரிப்பது, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தல், பதவி உயர்வு மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து அங்கு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திரிபோஷ நிறுவனத்தின் மூலப்பொருள் களஞ்சியசாலை, உற்பத்தி நடவடிக்கைகள், இயந்திர செயற்பாடு, பொதியிடல் செயற்பாடுகள் மற்றும் தரமுகாமைத்துவ செயற்பாடுகள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் பார்வையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |