வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: மிதிகம ருவன் மீது விசாரணை ஆரம்பம்!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மிதிகம ருவன் என்பவர் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவன் தன்னை கொலை செய்ய தயாராகி வருவதாக காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாகத் அறிவித்துள்ளார்.
மிதிகம ருவனின் இரண்டு நண்பர்களை ஆயுதங்களுடன் கைது செய்ய லசந்த விக்ரமசேகர, தகவல் வழங்கியமை தொடர்பில் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிருக்கு அச்சுறுத்தல்
எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. "எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிதிகம ருவன் அல்லது ருவன் ஜெயசேகர என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒரு பதிவு தொடர்பில் எனக்குத் தெரியும்.

எதிர்வரும் நாட்களில் அந்தப் பதிவின் நகலை சமர்ப்பிக்கவும் எனக்கு வாய்ப்பு உள்ளது. நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது அல்லது பிரதேச சபையை விட்டு வெளியேறும்போது என்னைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,"
என கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.