ஒட்டுமொத்த தொடருந்து சேவை தொழிற்சங்கங்களும் போராட தயங்காது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Strike Sri Lanka
Train Strike
By Mayuri
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தால், ஒட்டுமொத்த தொடருந்து சேவையின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட ஒருபோதும் தயங்காது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடருந்து திணைக்கள ஊழியர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோசமாக செயற்படமாட்டார்கள்.
கோரிக்கைகளுக்கு தீர்வு
இந்த நிலையில் எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.
இல்லாவிடில் இன்று (11) மாலை நிறைவேற்று சபை கூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |