தேர்தல் கால தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 18, 2024 12:53 PM GMT

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை தொடருந்து நேர அட்டவணை வழமை போன்று நடைமுறைப்படுத்தப்படும் என தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறுதினமான ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவைகளுக்காக தொடருந்துகள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

விசேட தொடருந்துகள்

இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

தேர்தல் கால தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல் | Train Scedule 21St Saturday

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW