நாட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!
Sri Lanka Tourism
India
Tourism
By Fathima
இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை நேற்று முன்தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் 131,898 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், 23,786 பேர் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.