காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய இன்று காலை 6 மணி வரையிலான நிலைவர அறிக்கையின்படி, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளதுடன் 193 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ கோரினால் அன்றி, அல்லது பணியை நிறுத்த அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்தால் அன்றி, இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.