மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.92 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 301.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ மற்றும் டொலரின் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.95 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 376.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.90 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 316.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.23 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.66 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 190.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.