அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி(CBSL) இன்றைய நாளுக்கான(21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 292.29 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 292.83 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாணய மாற்று விகிதம்
அத்தோடு, நேற்றையதினம் 300.81 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 301.33ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 210.41 ரூபாவாகவும், கொள்வனவு விலை 201.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 314.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 302.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 372.22 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 358.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 180.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 190.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 223.60 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 214.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.87 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |