பொருட்களின் விலை குறைவடையவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Economic Crisis Sri lanka Food Recipes Economy of Sri Lanka
By Chandramathi Mar 30, 2024 03:12 AM GMT

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவடைந்த போதிலும், பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவடையவில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சியாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தனிநபர் செலவீனம்

உத்தியோகபூர்வ தரவுகளுக்கமைய, நாட்டின் தனிநபர் செலவீனம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலை குறைவடையவில்லை! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | The Price Of Goods Has Not Decreased

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனிநபர் செலவீனம் 16,524 ரூபாவாக பதிவாகியிருந்தது.

எனினும், புதிய தரவுகளுக்கமைய, ஜனவரி மாதம் அந்த செலவீனம் 490 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.