இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணும் வாய்ப்பு

Central Bank of Sri Lanka
By Mayuri Jul 23, 2024 04:18 AM GMT

இலங்கை மத்திய வங்கி இந்தமுறையும் வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

துணைநில் வைப்பு வட்டி வீதம் 8.5 சதவீதமாகவும், துணைநில் கடன் வட்டி வீதம் 9.5 சதவீதமாகவும் நிலவுகிறது.

மத்திய வங்கியின் நாணயச் சபை

நாளைய தினம் மத்திய வங்கியின் நாணயச் சபை கூடி, வட்டி வீதங்கள் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணும் வாய்ப்பு | The Central Bank Keeps Interest Rates Unchanged

எனினும், நாட்டின் நாணயச் சந்தையின் ஸ்திரத்தன்மையைக் கருதி, இந்த முறையும் வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதற்குத் தீர்மானிக்கப்படலாம் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW