வர்த்தமானியில் வெளியான 22ஆம் திருத்தச் சட்டமூலம்

Ranil Wickremesinghe Sri Lanka Cabinet
By Mayuri Jul 19, 2024 11:14 AM GMT

ஜனாதிபதியின் பணிப்பின் கீழ் 22ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தின் 83ஆம் உறுப்புரையின் (ஆ) பிரிவில் திருத்தங்களை ஏற்படுத்த அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த சட்டமூலம் வரையப்பட்டிருந்தது.

வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

இதனை வர்த்தமானியில் பிரசுரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கிய இருந்த போதும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் அவ்வாறு பிரசுரிக்காதிருக்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவுறுத்தியிருந்தார்.

வர்த்தமானியில் வெளியான 22ஆம் திருத்தச் சட்டமூலம் | The 22Nd Amendment Bill Was Gazetted

எனினும் இன்று அந்த திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW