நாட்டின் வெப்பநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் தொடர்ச்சியான வெளிப்புறச் செயற்பாடு, வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு என்பவற்றை ஏற்படுத்தும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
எனவே, நீரேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களை தடுக்க நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.