வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் போராட்டம் : பாடசாலைகள் மூடப்படும் என எச்சரிக்கை

Ministry of Education Northern Province of Sri Lanka Joseph Stalin
By Faarika Faizal Oct 16, 2025 03:26 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், ஆசிரியர் இடமாற்ற கொள்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேச மற்றும் அதி கஷ்ட பிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இட மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு : இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

அஸ்வெசும கொடுப்பனவு : இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

பின் கதவால் சென்ற ஆளுநர் 

அந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் போராட்டம் : பாடசாலைகள் மூடப்படும் என எச்சரிக்கை | Teachers Union Secretary Joseph Stalin

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தம்மை வந்து அதிகாரிகள் சந்திப்பார்கள் என ஆளுநர் செயலகம் முன்பாக ஆசிரியர்கள் காத்திருந்த போது, ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் ஆளுநர் செயலகத்தின் பின் கதவு வழியாக வெளியேறி சென்று விட்டனர் என ஆசியர் சங்க செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சகல பாடசாலைகளையும் மூடி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். நாங்கள் பிழையான செயலில் ஈடுபடவில்லை நியாமான கோரிக்கைகளை முன் வைத்து எமது உரிமைக்காகவே போராடி வருகிறோம்.

அத்துடன், ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பின் கதவால் சென்றமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். 

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

அடுத்த 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

அடுத்த 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW