ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Teachers Service Union
By Kamal Jul 08, 2024 02:18 AM GMT

நாளைய தினம் பாடசாலைகளில் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளைய தினம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு | Teachers Strike

தொழிற்சங்கப் போராட்டம்

எவ்வாறெனினும், அரச ஊழியர்களினால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ள தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பு தொடர்பில் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.