சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி : வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Money Income Tax Return
By Rakshana MA Jan 01, 2025 11:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளின் மாத வருமானம் 150,000 ரூபாய்க்கும் குறைவாக காணப்படுமிடத்து, அதற்கான வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வட்டிக்கு 10 வீத வரி பிடித்தம் செய்வது குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஆரம்பம்

சேமிப்பிற்கான வரி 

மேலும், இந்த வரி அறவீடு, 150,000 க்கு மேல் மாத வருமானம் உள்ள சிறுவர்களின் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அந்த வருமானத்தில் வட்டித் தொகை சேர்க்கப்பட்டால் மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறுவர்களின் சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு வரி : வெளியான தகவல் | Tax On Money In Children S Savings Accounts

தொடர்ந்தும் தெரிவித்த அவர், இந்த வரி உடனடியாக செயல்படுத்தப்படாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளை எளிதாக்க வங்கி அமைப்புடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான ரஞ்சன் ராமநாயக்க

மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலையான ரஞ்சன் ராமநாயக்க

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW