நாட்டு மக்களுக்கான வரிச் சலுகைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Government Of Sri Lanka
By Mayuri
மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதத்தை எட்டியப் பின்னர் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகை
அவர் மேலும் தெரிவிக்கையில், வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய காலத்தைத் துல்லியமாக கூற முடியாது.
ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கை விரைவாக எட்ட முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |