1417 பில்லியன் ரூபா வரி வசூல்! உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

Sri Lanka Inland Revenue Department
By Mayuri Oct 06, 2024 10:14 AM GMT

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1417 பில்லியன் ரூபா வரி வசூல்! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் | Tax In Sri Lanka

அதேநேரம் வரி செலுத்தாத நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW