கனடா தமிழ் அழகிகள் போட்டியில் மகுடம் சூடிய இலங்கை பெண்

By Fathima Oct 06, 2023 09:41 AM GMT

2023ம் ஆண்டிற்காக கனடாவில் நடைபெற்ற தமிழ் அழகிகள் போட்டியில் இலங்கையில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

கனடாவில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்திரா ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறித்த தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார்.

GalleryGallery