ரமலான் பண்டிகை கொண்டாட தலிபான்களால் பெண்களுக்கு தடை

Taliban
By Fathima Apr 23, 2023 06:40 PM GMT
Fathima

Fathima

ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15 ம் திகதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.

ரமலான் பண்டிகை கொண்டாட தலிபான்களால் பெண்களுக்கு தடை | Taliban Bans Women From Eid Celebrations

இந்நிலையில்,  ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ரமலான் பண்டிகையை வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டாடக்கூடாது என அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.