டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: வீரர்களுக்கு முழுமையான ஆயுதமேந்திய பாதுகாப்பு
அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும்.
இந்தியா - பாகிஸ்தான் அணி
குறிப்பாக பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக வெளிநாட்டுத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் உயர்மட்ட கமாண்டோ பிரிவினர் களமிறக்கப்பட உள்ளனர்.
வீரர்கள் விமான நிலையம் வந்திறங்கியது முதல் மீண்டும் நாடு திரும்பும் வரை அவர்களுக்கு முழுமையான ஆயுதமேந்திய பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பங்களாதேஷ் தொடரிலிருந்து விலகியதால் ஸ்கொட்லாந்து அணி இணைக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மோதல்களில் நடுநிலை வகித்து தொடரைச் சுமூகமாக நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக எஸ்.எஸ்.சி உள்ளிட்ட மைதானங்களும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.