விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்

By Fathima Mar 18, 2024 10:48 AM GMT

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

இதுதொடர்பான சுற்றுநிரூபம் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் வெப்பமான காலநிலை 

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பிற்போடுமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளை உடன் நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்தல் | Suspend School Meet Ministry Of Education

நாட்டில் பரவலாக கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது