சிவாஜிலிங்கத்திற்கு திடீர் சுகவீனம்! சென்னை மருத்துவமனையில் அனுமதி

M. K. Shivajilingam Chennai
By Fathima Mar 02, 2024 10:41 PM GMT
Fathima

Fathima

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிவாஜிலிங்கம், தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த வியாழக்கிழமை அவர் கொழும்பு திரும்பியிருந்தார்.

மேலதிக சிகிச்சை

எனினும் அந்த வழக்கில் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தெரிவித்து விடுதலை செய்திருந்தது. அதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வௌ்ளிக்கிழமை காலை கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

சிவாஜிலிங்கத்திற்கு திடீர் சுகவீனம்! சென்னை மருத்துவமனையில் அனுமதி | Sudden Illness For Shivajilingam

இதற்கிடையே நேற்று மாலை சிவாஜிலிங்கத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையி்ன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் அவரது உடல்நிலை குறித்த மேலதிக தகவல்களை வௌியிட மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.